
கொழும்பு, பெப்.17:
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன டுபாய்க்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
டுபாய் அரசுடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின்போது சர்வதேச வர்த்தக அமைச்சர் கலாநிதி தானி பின் அஹமட் அல் செயூதியை அமைச்சர் சந்திக்கவுள்ளார்.
அத்தோடு, இன்று முதல் 19ஆம் திகதி வரை டுபாய் கண்காட்சி மையத்தில் நடைபெறவுள்ள இலங்கை ஏற்றுமதி வர்த்தக நாமங்கள் வர்த்தகக் கண்காட்சியையும் அமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்.