
யாழிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சிங்கள மொழியில் வழங்கப்பட்ட படிவத்தில், தனது தாய்மொழி தமிழ் என இளைஞர் ஒருவர் எழுதிக் கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
யாழிலுள்ள நிதி நிறுவனமொன்றில் வாகன விபத்து காப்புறுதிக்கு படிவம் பெறுவதற்காக குறித்த இளைஞன் சென்றுள்ளார்.
இதன்போது அவருக்கு சிங்கள மொழியிலான படிவம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த படிவத்தை நிராகரித்து, தனக்கு தமிழ் மொழியிலான படிவத்தை வழங்கும்படி அவர் கேட்டுள்ளார்.
அத்துடன், சிங்கள மொழியிலான படிவத்தின் மேல், ‘எனது தாய் மொழி தமிழ். தமிழ் படிவம் வழங்கவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.