
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும், சம்பிக்க ரணவக்கவையும் நேரில் சந்திக்க வைப்பதற்கு தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமிக்கும் திட்டத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, திடீரென ’43 ஆம் படையணி’ எனும் அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார். குறித்த இயக்கத்தின் மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.
2024 இல் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்தே சம்பிக்க இவ்வாறு செயற்படுகின்றார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. சம்பிக்கவின் சில நகர்வுகளால் அவர்மீது சஜித்தும் கடும் அதிருப்தியில் இருக்கின்றார்.
மாநாட்டின் பின்னர் சம்பிக்கவை சஜித் வெளிப்படையாகவே விமர்சிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலை தொடருமானால் எதிரணி பலவீனமடையும், இரண்டாக உடையும் என்பதால் இவ்விருவரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் இறங்கியுள்ளனர்.