புத்தளத்தில் அரிய வகை ஆந்தைக் குஞ்சுகள் மீட்பு

புத்தளம் காட்டுப் பகுதியில் இருந்து அரிய வகை மூன்று வெள்ளை நிற ஆந்தைக் குஞ்சுகள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாய் ஆந்தையின் பராமரிப்பில் இருந்த மேற்படி ஆந்தைக் குஞ்சுகள் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் மரத்திலிருந்து கீழே விழுந்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதகாவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கூறினர்.

குறித்த ஆந்தைக் குஞ்சுகள் Barn Owl வகை இனத்தைச் சேர்ந்தவையாகும்.

மேற்படி, மீட்கப்பட்ட மூன்று ஆந்தைக் குஞ்சுகளும் ஆபத்தான நிலையில் இல்லை என்றும், அவை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

குறித்த ஆந்தைக் குஞ்சுகள் மேலதிக மருத்து தேவைகளுக்காக நிகவெரட்டிய வனவிலங்கு கால்நடை மருத்துவப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்ட குறித்த ஆந்தைக் குஞ்சுகள் தனித்து வாழக்கூடிய நிலையில் இப்போது இல்லை எனவும், அவை நிகவெரட்டிய வனவிலங்கு கால்நடை மருத்துவப் பிரிவில் வைக்கப்பட்டு, உரிய முறையில் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு, அவை தனித்து வாழும் வயதை எட்டியதும், காட்டுப்பகுதியில் விடப்படும் என்று வனஜீவராசிகள் திணைகள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

கட்டைபறிச்சான் பாலத்துக்கு அருகாமையிலுள்ள குப்பைகளால் பொதுமக்கள் அசௌகரியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *