கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்வு 

வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுடன் இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் சந்திப்பொன்றை முன்னெடுத்திருந்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் குறித்த கலந்துரையாடல் இன்று (17) இடம்பெற்றது. இதன்போது குறித்த மாவட்டங்களில் கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், அதற்கான தீர்வுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

குறிப்பாக பால்மாவிற்கு பதிலாக திரவப்பாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உற்பத்தி செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், மேய்ச்சல் தரை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

குறிப்பாக வனவள திணைக்களங்களின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவித்து மேய்ச்சல் தரைகளாக பயன்படுத்துவது தொடர்பாகவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் கால்நடை வளர்பில் ஈடுபடுபவர்களிற்கு ஊக்குவிப்பு தொகை வழங்குவதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் அரச அதிபர்களான ஸ்ரான்லி டிமெல், பி.ஏ.சரத்சந்திர, வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களங்களின் பணிப்பாளர்கள், கால்நடை வைத்தியர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *