
நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் 14 வயது சிறுவனைக் கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
மெரின் ஸ்டீபன் என அடையாளம் காணப்பட்ட குறித்த சிறுவன் “ஒட்டிசம்” பாதிப்புடையவர் என்றும், சிறுவனின் வீட்டிற்கு அருகில் உள்ள தேவாலயத்தில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொள்வதாக கூறி கடந்த ஜனவரி 22 ம் திகதி வீட்டை விட்டு வெளியேறியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு வீட்டை விட்டு வெளியேறிச் சென்ற தனது மகன் மீண்டும் வீட்டிற்கு வரவேயில்லை எனவும் காணாமல் போனது பற்றியும் அந்த சிறுவனின் பெற்றோர் கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பெற்றோர்கள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, இதுதொடர்பில் கொச்சிக்கடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் , காணாமல் போன சிறுவன் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் 07-8591631, 031-2277222, மற்றும் 031-2276338 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.