யாழ்.போதனா வைத்தியசாலையில் வெளிநாட்டு பயணத்திற்கான பி.சி.ஆர் பரிசோதனைக்காக 6500.00 ரூபா கட்டணம் இன்றுமுதல் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
ஆகவே, பணத்தினை செலுத்தி பற்றுச் சீட்டினை பதிவின் போது சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்ட்டுள்ளது.