
வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு அரிசியின் விற்பனை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தேசிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
அரசாங்கத்தினால் அரிசி இறக்குமதி செய்யப்படுவதால், நுகர்வோர் இறக்குமதி அரிசியை கொள்வனவு செய்து வருவதாக அந்த சங்கத்தின் தலைவர் பீ.கே ரஞ்சித் தெரிவித்தார். இதனால் உள்நாட்டு அரிசியின் விற்பனை 60 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
முன்னதாக விற்பனை செய்யப்பட்ட விலையை காட்டிலும் தற்போது குறைவடைந்துள்ளதாக தேசிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் பீ.கே ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.