நாடாளுமன்றக் கூட்டத் தொடரை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதிவரை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது எனச் சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன ஊடகங்களிடம் கூறியுள்ளார்.உற்பத்திப் பொருட்கள் தரகர்களுக்கு, உரிமம் வழங்கும் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மற்றும் இறப்பர் மீள் நடுகை மானிய சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் என்பன எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட உள்ளதாகச் சபை முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
