
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் நேற்றிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது. நாளை 19 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
தங்களது கட்சி வேட்பாளர்களுக்காக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்தச் சூழலில் தேர்தல் நடப்பதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னதாக பிரச்சாரம் முடிக்கப்பட வேண்டும் என்பதால் நேற்று மாலை 6 மணிக்கு பிரச்சாரம் நிறைவடைந்தது.
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் வரும் 19ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.