
கொழும்பு, பெப் 18: ஹொரண, கடான பிரதேசத்தில் தன்னுடைய 7 வயது மகனை கடத்திய ‘நீலக’ என்ற ரவுடியை பொலிஸார் சுட்டுக் கொலை செய்தனர்.
ஹொரணை வெல்லப்பிட்டிய பிரதேசத்தில் பொலிஸாருடன் நடந்த மோதலில் ‘நீலக’ சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஹொரணையில் உள்ள மாமியாரின் வீட்டில் சந்தேகநபரின் மகன் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று காலை அந்த வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் சென்ற நீலக, டி- 56 துப்பாக்கியால், வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியபடி, தனது மகனைக் கடத்திச் சென்றுள்ளளார். இதன்போது பொலிஸ் நடத்திய பதில் தாக்குதலில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தனது மனைவியை கூரிய பொருளால் தாக்கி காயப்படுத்தியதற்காக இவர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார். இதைத், தம்பதியினரின் 07 வயது மகன், ஹொரணையில் உள்ள பெண்ணின் தாயின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தார்.