
இந்திய மீனவர்களின் ஊடுருவல் தொடர்பில் இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் டிரின் ஜொரான்லி எஸ்கெடல் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.அ.ஸ்ரான்லி டிமேல்லிடம் விபரங்களைக் கேட்டறிந்தார்.
இலங்கைக்கான நோர்வே நாட்டின் தூதுவர் இன்று மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார். இதன்போதே இந்த விடயம் தொடர்பாகவும் கேட்டறிந்தார்.
நோர்வேத் தூதுவர் தனது பயணத்தின்போது மன்னார் மவட்ட அரச அதிபரிடம் இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் ஊடுருவுவதனால் இலங்கை மீனவர்கள் அதாவது மன்னார் மாவட்ட மீனவர்களும் பாதிக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன அதன் நிலமை தற்போது எவ்வாறு உள்ளது எனக் கேட்டறிந்தார்.
இந்த விடயத்திற்கு பதிலளித்த மன்னார் மாவட்ட அரச அதிபர் இந்திய மீனவர்களின் வருகையால் மன்னார் மீனவர்கள் அதிகம் பாதித்த நிலையில் குறித்த விடயம் கடற்படையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதனால் எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் தற்போது கைது செய்யப்படுகின்றனர் இதன் காரணமாக இந்திய மீனவர்களின் வருகை தற்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.