2022ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் டிஜிட்டல் அடையாள அட்டையினை வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
கிராம உத்தியோகத்தர் முதல் ஜனாதிபதியின் செயலாளர் வரையிலான அரச செயற்பாடுகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டு எதிர்வரும் 30 மாதங்களுக்குள் சகல சேவைகளும் இலத்திரனியல் முறையில் வழங்கப்படவுள்ளதுடன் ஜனாதிபதி நிர்ணயித்த இலக்குகளை பூர்த்தி செய்யவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று காலி தொழில்நுட்ப பூங்காவை பார்வையிட்டதன் பின்னர் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கலாசார தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் நாடளாவிய ரீதியில் ஐந்து “தொழில்நுட்ப பூங்காக்களை” உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது
தொழில்நுட்ப கண்டுபிடிப்பு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல், , ஏற்றுமதி சார்ந்த தொழில்களை ஊக்குவித்தல், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், சம்பந்தப்பட்ட பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் தேசிய பொருளாதார அபிவிருத்திக்காக அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதன் மூலம் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.