
இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, அந்த அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ரஞ்சித் திஸாநாயக்கவுக்கு இடமாற்றம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அரசு உயர் அதிகாரிகள் அவரிடம் விசாரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் வேறொரு இராஜாங்க அமைச்சு அல்லது வேறு அரச நிறுவனத்தில் உயர் பதவியில் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா, அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ரஞ்சித் திஸாநாயக்கவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அமைச்சின் தனிப்பட்ட ஊழியர்களை அண்மையில் நீக்கினார்.
நேற்றும் அமைச்சின் ஊழியர்கள் அமைச்சில் இருக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன