
யாழ்ப்பாணம்,பெப்,18
இலங்கைச் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 47 தமிழக மீனவர்களும் வெள்ளிக்கிழமை காலை தமிழகம் சென்றடைந்தனர்.
இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய சமயம் 2021ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் கைது செய்யப்பட்ட 56 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையின் பெயரில் விடுவிக்கப்பட்டனர்.
இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் நாடு திரும்ப முயன்ற சமயம் கொரோனாத் தொற்றிற்கு இலக்காகிய நிலையில் அதன் பின்பு இன்று அதிகாலை தமிழகம் பயணித்துள்ளனர்.