
கொடிகாமம், பெப்:18
யாழ்.கொடிகாமம் பகுதியில் வான் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொடிகாமத்தில் இருந்து வருகை தந்த வானும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், எழுதுமட்டுவாழ் பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.