
தங்காலை பகுதியில் அடையாளம் தெரியாத குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் பொலிஸ் கான்ஸ்டபல் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தங்காலை விதரந்தெனிய பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபல் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட தகராறு காரணமாக கொலை சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.