
தங்காலை, பெப்.18:
தங்காலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய கான்ஸ்டபிள் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
விராந்தெனிய பகுதியைச் சேர்ந்த 34 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.