ஒட்டாவாவில் எல்லைமீறும் ஆர்ப்பார்ட்டம் – அடக்குவதற்கு புதிய முறையினை பிரயோகிக்க தீர்மானம்

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் தொடர் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக நாடு பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளவதாகவும், ஆர்ப்பாட்டங்கள் எல்லை மீறிச் சென்று கொண்டிருப்பதை கட்டுப்படுத்த வேண்டிய நேரம் வந்துள்ளதாகவும், இன்னும் ஒரு சில நாட்களுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது பாரவூர்திகளை அகற்றி தமது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராத பட்சத்தில் இதுவரை மக்கள் பார்த்திராத புதிய முறைமை ஒன்றினை பிரயோகித்து ஆர்ப்பாடத்தினை முடிவுக்கு கொண்டு வர காவல்துறையினருக்கு கட்டளை பிறப்பித்துள்ளதாக இடைக்கால தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டீவ் பெல்லை மேற்கோள்காட்டி   கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக வீதி நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டங்கள் மேற்கொள்ளும் பாரவூர்திகள் தமது போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் அவற்றை நிரந்தரமாக பறிமுதல் செய்வதுடன் கொவிட் சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் போராட்டக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய அரசுக்கெதிரான தொடர் போராட்டங்கள் காரணமாக பல தரப்புக்களாலும் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்ட கனேடிய காவல்துறை முன்னால் தலைவர் பீட்டர் ஸ்லோலி தனது பதவியை கடந்த செவ்வாய்க்கிழமை திடீர் இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

இவரின் பதவி விலகலைத் தொடர்ந்து இடைக்கால காவல்துறை தலைவராக ஸ்டீவ் பெல் நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தியாகபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *