300 மெகாவொட் மின்சாரம் தனியார் துறைகளிடமிருந்து கொள்வனவு

கொழும்பு, பெப்.18:

இலங்கை மின்சார சபைக்கு தனியார் துறையிடமிருந்து 300 மெகாவொட் மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய அனுமதி வழங்கியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்  ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனக்க ரத்நாயக்க கூறுகையில்:

நேற்று முதல் தனியார்துறை மின்பிறப்பாக்கிகளிலிருந்து இந்த மின்சாரத்தைக் கொள்வனவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.   பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மின்சார சபை என்பன இணைந்து மின்பிறப்பாக்கியை பயன்படுத்தும் முன்னோடித் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பட்டுள்ளன.

நேற்று மாலை 4 மணிமுதல் 6 மணிவரையான காலப்பகுதியில், 70 மெகாவொட் மின்பிறப்பாக்கிகள் இயக்கப்பட்டுள்ளதுடன்  களனிதிஸ்ஸ இணைந்த சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்தி நடவடிக்கை, எரிபொருள் பற்றாக்குறையால் நேற்றிரவு இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *