
காரைநகர், பெப்.18:
காரைநகர் – களபூமி பகுதியில் 125 கால் சாராய போத்தல்களுடன் 64 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சித்தங்கேணி மதுவரி நிலையத்தினர் இணைந்து இக்கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
சந்தேகநபரின் வீட்டில் வைத்து சாராயம் விற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.