தகாத செயற்பாடுகளில் ஈடுபடும் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுக்கு கடுமையான தண்டனை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தகாத செயற்பாடுகளில் ஈடுபடும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை ,கட்சி தலைமையுடன் சேர்ந்து மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணையகம் மாகாண உள்ளுராட்சி திணைக்களத்துக்கும் , ஆளுநருக்கும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணையகம் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

சில உள்ளூர் அதிகாரசபைகளுக்கு தெரிந்தனுப்பப்பட்டுள்ள உறுப்பினர்கள் தமது பதவிக்கு ஒவ்வாத நடத்தைகளிலும் செயல்களிலும் ஈடுபடுவதாக இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியிடப்படும் சந்தர்ப்பங்களை சர்வசாதாரணமாக காணக்கூடியதாக உள்ளது .

அதேபோல் தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் அத்தகைய காட்சிகளையும் ஊடக் தகவல்களையும் பார்க்கும் , கேட்கும் பொதுமக்கள் அவ்விடயங்களை ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர் .

சில உள்ளூர் அதிகாரசபை பிரதிநிதிகளின் இத்தகைய நடத்தைகளும் செயல்களும் ஊடாக இந்தாட்டில் அமுலிலுள்ள மக்கள் பிரதிநிதித்துவ சனநாயக நிறுவன முறைமை குறித்தும் மக்களின் வாக்குகளினால் தெரிந்தனுப்பப்படும் மக்கள் பிரதிநிதிகள் குறித்தும் அத்தகைய நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்தும் பொதுமக்கள் மத்தியில் காணப்படும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் முறிவடைய காரணமாகி வருகின்றதென்பது தேர்தல் ஆணைக்குழுவின் அபிப்பிராயமாகும் .

இத்தகைய நிலைமையில் மக்கள் பிரதிநிதிகளின் இவ்வாறான முறைகேடான நடத்தைகளை நிறுத்துவதும் அவர்களின் நல்வாழ்வை உறுதிசெய்வதும் அத்துடன் குறித்த நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் பொருட்டு செயலாற்றும் தேவை இருக்கின்றதென்பதை தேர்தல் ஆணைக்குழு அவதானித்துள்ளது .

இதற்கு மாகாண ஆளுநர்களின் தத்துவங்களைப் பிரயோகித்தட அதற்குகந்த நடவடித்தைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பிருப்பதால் , இவ்விடயம் மீது தங்களது கவனத்தை ஈர்ப்பது உகந்ததென தேர்தல் ஆணைக்குழு மேலும் தீர்மானித்துள்ளது .

மேற்கொள்வதற்கு ஆணைக்குழு 03. அதனடிப்படையில் இவ்வாறான பிறழ் நடத்தைகளில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகள் , தொடர்பாக தருந்த விசாரணையொன்றை மேற்கொண்டு அதற்குப் பொறுப்பான , குற்றப் பொறுப்புள்ளவர்களாகக் காணப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை துரிதமாக அவசியமான … நடவடித்கைகளை எடுக்குமாறு என தங்களைக் கோருவதற்கு தேர்தல் தீரமானித்துள்ளது .

மேலும் இதற்குகந்த ஒரு மாற்று வேலைத்திட்டத்தை மேற்கொள்வதன் மீது தங்களது கவனம் ஈர்க்கப்படுமென எதிர்பார்ப்பதுடன் இவ்வாறான பிறழ் நடத்தைகளில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசியற் கட்சிகளின் செயலாளர்களை அறிவுறுத்தி பிறழ் நடத்தைகளில் ஈடுபடும் அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கு அக்கட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவிப்பதென தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதென்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன் என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *