யாழில் முதலிடத்தில் ஊடகப் பணி – மாவட்டச் செயலர் பெருமிதம்

ஜனாதிபதி கோட்டபாய ராஜ பக்சவின் எண்ணக்கருவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் “சுபீட்சத்தின் நோக்கு” செயற்திட்டத்தின் ஒரு பகுதியா” வெளியீட்டு பணியகம்” தற்போது யாழில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டச் செயலகத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இந்த நிகழ்வில் ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெரும கலந்து கொண்டுள்ளார்.

நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவிக்கையில்:

இந்த வெளியீட்டு பணியகத்தின் ஊடாக அரச அலுவலர்கள்,மாணவர்கள்,ஊடக வியலாளர்கள் என அனைவரும் தமக்கான விடயங்களை ,சட்ட ரீதியாண ஆவணங்களை பார்த்து பயன் பெற்றுக்கொள்ள முடியும்.

யாழில் முதலிடத்தில் இந்த ஊடக பணி உள்ளது. இங்குள்ள ஊடகவியளார்கள் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர்.மிகவும் வேமாக இலத்திரனியல் ஊடங்களில் செய்திகளை நாம் காணக்கூடியதாக உள்ளது.

ஆகவே ஊடகவியலாளர்களின் தொழிலை மேம்படுத்த நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.இதற்கு ஊடாக அமைச்சர் உதவி செய்ய வேண்டும்.

அத்துடன் யாழ் பல்கலையிலும் ஊடக கற்கை நெறிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *