
கொழும்பு, பெப்.18:
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமைக்காக தொடரப்பட்டுள்ள வழக்கிலிருந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ வெள்ளிக்கிழமை விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.
சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் நாமல் பலல்ல, ஆதித்திய பட்டபெந்திகே, மொஹமட் இர்ஸடீன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் வழக்கு விசாரணையின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் எதனையும் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்த முடியாத காரணத்தினால் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.