
நாட்டில் பிரதானமாக இரண்டு மொழிகள் பேசப்படும் நிலையில், நான் தமிழ் மொழி பேச முடியவில்லை என வெட்கப்படுகின்றேன் என அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜொகான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாரும் போதே அவர் இவாறு தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களம் உண்மையான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது.
அந்த வகையில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதியில்,மூன்று அரச தகவல் வெளியீட்டு பணியகத்தை அமைத்துள்ளோம்.
அத்துடன் என்னால் இங்கு தமிழ் மொழியில் உரையாற்ற முடியவில்லை என்று நினைக்கும் போது வெட்கப்பாடுகின்றேன்.
மூன்று மொழிகளிலும் நாம் தகவல்களை மக்களுக்கு வழங்கி வரும் நிலையில் இன்று தமிழ் மொழி பேச முடியவில்லை என்றார்.