
எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு போராட்டங்கள்,ஆர்ப்பாட்டங்கள் அவசியம் என கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடாகவியலாளர்களுக்கான சிநேகபூர்வமான கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி முனையை விட வலிமையானது பேனா முனை. ஆகவே நல்ல விடயங்களை ,உண்மையான விடயங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஊடகங்கள் பணி செய்து வருகின்றன.
அவற்றின் சேவையை நான் மதிக்கிறேன். அழிவாயுத காலம் போய் விட்டது. ஆகவே ஊடகங்கள் அறிவாயுதத்தை இனி தீட்ட வேண்டும்.
எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு போராட்டங்கள் அவசியம்.ஆனால் அவை வேண்டு மென்று தூண்டுதலில் செய்வதாக இருக்க கூடாது.
அதை சரியாக வெளிப்படுத்துவதே ஊடகத்தின் கடமை.அத்துடன் 13 ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்கு நல்லதொரு ஆரம்பம். இதை நான் முன்னரே கூறி விட்டேன்.சிலருக்கு இப்போது தான் இது புரிகிறது என்றார்.