யாழ்ப்பாண மாவட்ட வெளியீட்டு பணியகம் அங்குராப்பணம் செய்யப்பட்டது!

அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில்  யாழ்ப்பாண மாவட்ட வெளியீட்டு பணியகத்தின் அங்குராப்பண நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஊடகத்துறை  அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலமையில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து யாழ். மாவட்ட ஊடகவியலாளர்களுடன் சிநேகித பூர்வ சந்திப்பும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சுரேன் ராகவன் , உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *