யாழில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஊடக அமைச்சர்

யாழ் மாவட்டச் செயலகத்தில் அரச தகவல் திணைக்களத்தின் “வெளியீட்டுப் பணியகம்” திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில்,அதற்கான பெயர் பலகையில் தமிழ் மொழி முதல் மொழியாக அச்சுப்பதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாவட்டச் செயலக கேட்ப்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் ,தமிழ் மொழியில் முழுமையாக மொழிபெயர்ப்புக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகள் யாழில் நடைபெறுவதற்கு அமைச்சர் டளஸ் அழகப்பெரும உதயுள்ளார் என நாடளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் :

யாழில் மிக சிறப்பாக ஊடகவியலாளர்கள் மிக சிறப்பாக செயற்பட்டு கொண்டு இருக்கின்றனர்.

ஆனால் அவர்களின் வாழ்வாதாரம் சீராக இல்லை.வீடு இல்லாத ஊடகவியலாளர்கள் கூட இங்கு இருக்கின்றனர்.

ஆகவே வீட்டுத் திட்டத்தில் அடுத்த முறை அவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

அமைச்சர் இது பற்றி கரிசனை காட்ட வேண்டும் .இதை விட யார் இயக்குகிறார்கள் என்றே தெரியாத பரபரப்பு ஊடகங்கள் பல இங்கு உள்ளன.

அவை மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுகின்றது.ஆகவே சமூக வலைத்தளங்களை ஒழுங்கு படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *