
கொழும்பு, பெப்.18
இன்று முதல் பயணிகள் ரயில் பயண சீட்டுக்களை ஒன்லைன் மூலம் முற்பதிவு செய்து கொளள்ள முடியும் என இலங்கை ரயில்வே சேவையின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தம்மிக்க ஜயசுந்தர கூறுகையில்,
பயணிகள் இணையத்தில் பயணச்சீட்டை முன்பதிவு செய்துகொள்ளமுடியும் அல்லது கையடக்க தொலைபேசி செயலி ஊடாக ஆசனத்தை முன்பதிவு செய்ய முடியும்.
இதேவேளை இதற்கான கையடக்கத் தொலைபேசி செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பயணிகளின் தேவைக்கு ஏற்ப எதிர்காலத்தில் இந்த வசதி கிடைக்கும் என்றார்.