யாழ்ப்பாணம், வடமராட்சி, கரவெட்டி, நெல்லியடி இராஜகிராமம், கன்பொல்லை பகுதியில் கண் பார்வை குறைந்த 100 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும், சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ் பணிப்பாளருமான யாழ், சரவணையை சேர்ந்த திரு.விசுவாசம் செல்வராசா நெறிப்படுத்தலில், அவரின் புதல்வியான சிந்து பிரியாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று பூமணி அம்மா அறக்கட்டளையின் பொருளாளர் செல்வி சந்திரகுமார் கீர்த்தனா தலைமையில் குறித்த பகுதிகளில் வசிக்கும் வறிய நிலை மக்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் அறக்கட்டளையின் இலங்கை நிர்வாகிகளான தலைவர் நா.தனேந்திரன், செயலாளர் N.விந்தன் கனகரட்ணம், சிறந்த சமூக சேவையாளரும் லண்டன், மற்றும் திருகோணமலையை சேர்ந்தவருமான க.லிங்கராசா (சிங்கன்), அறக்கட்டளையின் ஆலோசகர், இ.மயில்வாகனம், இணைப்பாளர், யோசேப், உப செயலாளர் இ.சற்குருநாதன், அறக்கட்டளையின் நிர்வாகசபை உறுப்பினர் செல்வி ச.கார்த்திகா மற்றும் ஜே.363 கரவெட்டி மேற்கு பிரிவு கிராம சேவையாளர் க.றதீசன் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகளை வழங்கி வைத்தனர்.


