தனிநபர் வரி செலுத்துவோரில் 90 சதவீதமானோர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்! samugammedia

தனிநபர் வரி செலுத்துவோரில் 90 சதவீதமானோர் கடந்த வருடம் வரி செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும், ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் நிறுவனங்களில் 85 வீதமானோர் வரி செலுத்தவில்லை என்பதுடன், அவற்றில் 494 நிறுவனங்கள் மட்டுமே வரியை செலுத்தியுள்ளன.

இது குறித்து தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டமிடலை அமுல்படுத்துவதற்கான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை சுங்க மற்றும் கலால் திணைக்களத்தின் திறமையின்மை மற்றும் முறைகேடு காரணமாக, அரசாங்கத்திற்கு வருடாந்தம் சுமார் 500 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

எனவே, அரசின் வரி வருவாயை அதிகரிக்கும் வகையில் செயல்படாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும், தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டமிடல் அமுலாக்கத்திற்கான துறைசார் கண்காணிப்புக் குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அறிக்கையொன்றையும் சமர்ப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *