
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்த தோடு, சைக்கிள், முக்கிய ஆவணங்கள் உள்ளடங்கிய பெட்டகம் என்பன நேற்றிரவு களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டில் உள்ளவர்கள் இன்று காலை எழுந்து பார்த்தவேளையே வீட்டில் திருட்டு நடந்த விடயம் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து இன்று காலை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.