
இதுவரை பிடிபட்டதிலேயே பெரிய உப்பு நீர் முதலை என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற முதலை உயிரிழந்துள்ளது.
பிலிப்பைன்சில் உள்ள Bunawan என்ற கிராமத்தில் மீனவர் ஒருவர் மாயமானார். பின்னர், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 12 வயதே ஆன பள்ளி மாணவியின் தலை மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் இருவரையுமே முதலை ஒன்று விழுங்கியதாக கருதப்பட்ட நிலையில், 2011ஆம் ஆண்டு, 21 அடி நீளமும் சுமார் 1000 கிலோ எடையும் கொண்ட Lolong என்ற பிரம்மாண்ட முதலை ஒன்று அப்பகுதியில் சிக்கியது.
பிடிபட்ட அந்த முதலையை சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்கா ஒன்றில் வைத்திருந்தார்கள். அந்த முதலையைப் பார்க்க அந்த நேரத்தில் கூட்டம் அலைமோதியுள்ளது.
இந்நிலையில், 2013ஆம் ஆண்டு ஒரு நாள் அந்த முதலை மல்லாந்து உயிரிழந்து கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது. கொஞ்சம் நாட்களாகவே அந்த முதலை உணவு உண்ண மறுத்துவிட்டதாம். கடுமையான மன அழுத்தத்தால் அது பாதிக்கப்பட்டிருந்ததாக Bunawan மேயரான Edwin Elorde என்பவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த முதலையின் உடல் பதப்படுத்தப்பட்டு மணிலாவிலுள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக ஒருவர் சமூக ஊடகம் வாயிலாக தெரிவித்துள்ளார். அதன் உடலைப் பார்வையிட்ட மற்றொருவர், அது மிகப்பெரியதாக டைனோசார் போல இருந்ததாக தெரிவித்துள்ளார்.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.