
கொழும்பு, பெப் 19: சாலைத் திட்டம் தொடர்பாக ராஜாங்க அமைச்சர் ஒருவரை, இன்னொரு ராஜாங்க அமைச்சர் மிரட்டும் ஆடியோ சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த ஆடியோவில் கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் திட்ட அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, சாலைத் திட்டம் ஒன்று தொடர்பாக, கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு ராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவை அச்சுறுத்தும் குரல் பதிவு இடம்பெற்றுள்ளது.
எவ்வாறாயினும், இந்த ஆடியோ கிளிப்பில் ராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவின் குரல் இடம்பெறவில்லை.