
கொழும்பு, பெப் 19: ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தொடங்கிய இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, அனுராதபுரத்தில் உள்ள சல்காது மைதானத்தில் பேரணியை நடத்த, அக் கட்சியின், செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதே மைதானத்தில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அண்மையில் பேரணி நடத்தியிருந்தது.
இது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் நடந்த கூட்டத்தில் ரஞ்சித் மத்தும பண்டார, சரத் பொன்சேகா, திஸ்ஸ அத்தநாயக்க, ஹரின் பெர்னாண்டோ, ஹர்ஷ டி சில்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.