
தங்காலை, பெப்.19
தங்காலை – வித்தாரந்தெனிய பகுதியில், ஆயுத்தால் தாக்கப்பட்டு, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தின், பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பேச்சாளர் சிரேஷ்டபொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் நிஹால் தல்துவ கூறுகையில் ,
தாக்குதல் சம்பவத்தில் 15 பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்களைக் கைது செய்வதற்காக, விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மதுபோதையில் இருந்த, 15 பேர் கொண்ட குழுவினர், பொலிஸ் கான்ஸ்டபிளின் வீட்டிற்கு சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தரும், அவரது சகோதரரும் வீட்டில் வைத்து தாக்கப்பட்டனர்.
பின்னர், சந்தேகநபர்கள் பொலிஸ் உத்தியோகத்தரை அருகிலுள்ள உணவகத்திற்கு அழைத்து சென்று தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்துள்ளாரென விசாரணைகளில் வெளிவந்துள்ளன.
சம்பவத்தில் காயமடைந்த அவரது சகோதரர் கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.