
பதுளை, பெப்.19
பதுளை மாவட்டத்தில் உதவி ஆசிரியர்களாக பணிபுரியும் 271 பேருக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.