தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள் – சர்வதேச மன்னிப்பு சபை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு பயங்கரவாதத் தடைச் சட்டத்துடன் தொடர்புடைய வகையில் அரசாங்கத்தினால் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய 7 பரிந்துரைகளையும் அச்சபை முன்வைத்துள்ளது.

இன்னமும் வழக்குப்பதிவு செய்யப்படாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ள கிளிநொச்சியைச் சேர்ந்த 34 வயதான டிவானியா முகுந்தன், 28 வயதான செல்வநாயகம் சசிகரன், காத்தான்குடியைச் சேர்ந்த 23 வயதான மொஹமட் இமாம் ஆகியோரை விடுவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி ஒருவரை நீண்ட காலத்திற்குத் தடுத்து வைப்பதற்கான வாய்ப்பை வழங்கும் இச்சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுமையை சிறுபான்மையினரே தற்போதும் தாங்கிக் கொண்டிருக்கின்றனர் என்றும் அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே நிலையில் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் பிரகாரம் கொண்டிருக்கக்கூடிய கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யும் வகையில் இச்சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *