
யாழ்ப்பாணம். பெப்.19
எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 6பேர் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு நாக பட்டினத்தைச் சேர்ந்த நாட்டுப்படகில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்களே இவ்வாறு எல்லை தாண்டிய சமயம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தற்போது யாழ்ப்பாணம் மயிலிட்டித்துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.