
யாழ்ப்பாணம், பெப்.19
கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க தலைமையிலான 75 பேர் கொண்ட குழுவினர் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் சபைக்கு வருகை தராத நிலையில் பிரதி மேயர் துரைராஜா ஈசன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது கொழும்பு பிரதி மேயர் எம்.டி.எம். இக்பால் மற்றும் யாழ். பிரதி மேயர் துரைராஜா ஈசன் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.