மூளாயில் இடம்பெற்ற பொங்கல் விழாவும் கௌரவிப்பு நிகழ்வும்!

மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர் தேவஸ்தான பிரசாத் அரங்கில் நேற்றைய தினம் (18) பொங்கல் விழா, பரிசளிப்பு நிகழ்வு, கௌரவிப்பு நிகழ்வு, பேச்சுப் போட்டி ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.

சிங்கள, ஆங்கில பேச்சு போட்டிகள், சங்கீத, நடன போட்டிகள் ஆகியவற்றில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் கலாபூஷணம் ராகினி திருக்குமரனுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வுக்கான நிதியுதவியானது டென்மார்க்கில் உள்ள கணேஷ நாட்டிய சேஷ்த்திர இயக்குனர் சசிதேவியால் வழங்கப்பட்டது.

அத்துடன் நடனம், சங்கீதம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய வகுப்புக்களை இலவசமாக மாணவர்களுக்கு நடாத்துவதற்கு சசிதேவி, தொடர்ந்து நிதி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், சிறீகௌரி குமணன் அவர்கள் தலைமை தாங்கிய இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ராகினி திருக்குமரன், சிறப்பு விருந்தினர்களாக சிவமலர் சுந்தரபாரதி,நடராசா சிவரூபன், ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *