
டீசலில் இயங்குவதும் குளிரூட்டல் வசதியுள்ளதுமான இரண்டாவது பல்வகை ரயில் தொகுதி, நடைமுறையில் உள்ள கடன் திட்டங்களின் கீழ் இந்தியாவால் இலங்கைக்கு கையளிக்கப்படவுள்ள நிலையில் அதன் பரீட்சார்த்த பயணம் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்த இந்த பரீட்சார்த்த பயணத்தில் இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
உலகத்தரம் வாய்ந்ததும் நம்பகமானதுமான புகையிரத சேவை வசதிகளை இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக இந்திய – இலங்கை ஒத்துழைப்பு குறித்து பெருமிதம் கொள்கின்றோம் என இது குறித்து இலங்கைக்கான இந்தியத் தூதரகம் கருத்து வெளியிட்டுள்ளது.