கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது பெரிய புயல் நேற்று வெள்ளிக்கிழமை வடக்கு ஐரோப்பாவை அடித்து நொறுக்கியுள்ளது. இதற்கு யூனிஸ் புயல் என பெயரிடப்படுள்ளது.
உடனடி தகல்களின் அடிப்படையில் காற்றின் வேகம் காரணமாக மரங்கள் முறிந்ததாலும் லண்டன் அரங்கின் மேற்கூரை கிழிந்ததாலும் குறைந்தது ஒன்பது பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் அனேகர் காணாமல் போயுள்ளனர் எனவும் ரெிவிக்கப்படுள்ளது.
யூனிஸ் புயல் வடக்கு ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பயணம் செய்து பாரிய பொருட் சேதங்களையும ஏற்படுத்தியுள்ளதாகவும் இங்கிலாந்தில் இதேவேரை இல்லாத அளவிற்கு காற்று சுமார் 196 கிலோ மீற்ளர் வேகத்தில் வீசியுள்தாகவும் இங்கிலாந்து வானிலை சேவை தெரிவித்துள்ளது.
தவிர இப்புயல் தற்போது பெல்ஐியம், நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளை நோக்கி புயல் விரைந்து கொண்டு செல்வதாக கூறப்படுகின்றது.
கடல் பயணங்கள் மற்றும் ரயில் பயணங்கள் முற்றாக பாதிக்கப்பட்ட ஒரு சூழல் காணப்படுகின்றது. வீதியோர மரங்கள் மற்றும் கூரைகள் விழுந்து உயிர்ப் பலிகளும் ஆங்காங்கே இடம் பெறுவதாகவும் சரியான எண்ணிக்கைகளை வெளியிட முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்திலும் ஐந்திற்கு மேற்பட்ட உயிரிழப்புக்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.