இலங்கை மக்களுக்கு சரியானதைச் செய்தாலும் அதனைத் தடுப்பதற்கு பல்வேறு குழுக்கள் பல சதித்திட்டங்களை வகுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) விசனம் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறான சதி முயற்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகார சபைக்கு இன்று திடீர் விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி, வலுசக்தி அதிகார சபையின் முகாமைத்துவம், ஆராய்ச்சி, மூலோபாயத் திட்டம், வலுசக்தி முகாமைத்துவம் போன்ற பிரிவுகளுக்குச் சென்று அவற்றின் பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
