
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவிட்டு, அராலி வீதியில் பேருந்துகாக காத்திருந்த பெண் ஒருவரது தங்கச்சங்கிலி நேற்று முன்தினம் பெண் ஒருவரால் அறுத்துச் செல்லப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை பொலிஸார் துணைவி பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவரை அறுக்கப்பட்ட சங்கிலியுடன் கைது செய்தனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
https://samugammedia.com/cut-the-chain-of-the-woman-waiting-for-the-bus-incident-in-jaffna/