தமிழர் உரிமை கண்காணிப்பகத்தின் இரண்டாவது மக்கள் அமர்வு மன்னாரில்!

தமிழர் உரிமை கண்காணிப்பகத்தின் இரண்டாவது மக்கள் அமர்வு இன்றைய தினம் சனிக்கிழமை கீரி ஞானோதயா மண்டபத்தில் சட்டத்தரணி வினோதன் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு இடம் பெற்றது

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக மன்னார் பள்ளிமுனை பகுதியில் கடற்படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள பொது மக்களின் காணி தொடர்பான பிரச்சினை மற்றும் இல்மனைற் மணல் அகழ்வு காரணமாக ஏற்படவுள்ள சுற்றுசூழல் பாதிப்பு மற்றும் கழிவு மீன்களை மக்கள் வசிக்கும் பகுதிகளில் வீசுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அதேநேரம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயம் மற்றும் போர் குற்ற உள்ளக பொறிமுறை விசாரணை தொடர்பாகவும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு அரசாங்கம் வழங்குவதாக தெரிவித்த மரண சான்றிதல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது

மக்களால் எழுப்பப்பட்ட பல்வேறு மனித உரிமை சார்ந்த கேள்விகளுக்கு சட்ட ஆலோசனைகளும் பதில்களும் வழங்கப்பட்டது

குறித்த செயலமர்வில் சட்டத்தரணி சுகாஸ், சட்டத்தரணி டினேஸன், சட்டத்தரணி ரொமெல்ஸம், சட்டத்தரணி ரூபன்ராஜ் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமை மீறல் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *