
வவுனியா, பெப் 19: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினர் க.சுமந்திரன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளதாகத் தெரிகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட மாநாட்டில் கலந்து கொள்ள, வவுனியாவிற்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவினை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினர் க.சுமந்திரன் சந்தித்து கலந்துரையாடியதாக தெரிகிறது. இந்நிலையில், சுமந்திரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.