யாழ்ப்பாணம் – பாசையூர் கடல் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட அடையாள விளக்கு கோபுரத்தின் செயற்பாடுகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.
இன்று மாலை இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன், கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அமைச்சரிடம், இதன்போது கச்சதீவு திருவிழாவில் பக்தர்கள் அனுமதிப்பது தொடர்பில் ஊடகங்கள் கேள்வியெழுப்பியபோது, இன்னும் சில தினங்களில் ஜனாதிபதியுடன் கதைத்து முடிவை அறிவிப்பேன்.- என்றார்.
