வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி, யாழ்ப்பாண கல்லூரி மைதானத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற விபத்தில் மூளாயை சேர்ந்த இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.
மாட்டு வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.