தமிழ்நிலம் மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ஒரு தொகுதி மாவீரர் பெற்றோர்களுக்கு மதிப்பளிப்பு நிகழ்வு நேற்றையதினம் முள்ளியவளையில் இடம்பெற்றது.
முள்ளியவளை மத்தி பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முள்ளியவளை கிழக்கு மத்தி வடக்கு போன்ற பகுதிகளை சேர்ந்த ஒரு தொகுதி மாவீரர் பெற்றோர்கள் இதன்போது மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள்.
மாவீரர்களுடைய பெற்றோர்கள் அழைத்துவரப்பட்டு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்கள் நினைவாக திருவுருவப்படத்திற்கு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன.
இதன்போது 80 வரையான மாவீரர் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் தென்னங்கன்று வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் சி.லோகேஸ்வரன், தமிழ் நில மக்கள் அமைப்பின் தலைவர் வினோகரன் , செயலாளர் அமிர்தசீலன். மற்றும் அமைப்பின் ஊடக பேச்சாளர் போசன் , அமைப்பின் உறுப்பினர்கள், முள்ளியவளை மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைமைகள், சமுக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டு மாவீரர்களின் பெற்றோர்களை கெளரவித்தனர்.